Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்த கே.ல்.ராகுல் ….! விவரம் இதோ ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.ல் .ராகுல் சதமடித்து அசத்தினார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டில்  சதமடித்த 2-வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2006-07 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான வாசிம் ஜாபர்  116 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 3  நாடுகளிலும் சதமடித்து அசத்திய வெளிநாட்டு தொடக்க வீரர்கள் வரிசையில் சயீத் அன்வர் (பாகிஸ்தான்) மற்றும் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருடன் தற்போது கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.

Categories

Tech |