தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 20 உலக நாடுகளுக்கும் மேல் இந்த தொற்று பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக இதுவரை 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழக எல்லைகள் அனைத்திலும் தீவிர கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக , கர்நாடகா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனைச்சாவடியில் 4 துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளா, கர்நாடகாவிலிருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.