மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அப்போது 2018-ஆம் ஆண்டு நளினி உட்பட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை கவனித்துக்கொள்வதற்கு ஏற்றவாறு நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி நளினிக்கு இன்று 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். வேலூர் பெண்கள் தனி சிறையிலிருந்து பரோலில் நளினி வெளியே வந்தார்.