முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து இந்து சமய அறநிலையத்துறையில் அதிக நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். அதன்படி தளங்களில் மரக்கன்றுகள் நடுதல், கோயில் நிலங்களில் கையகப்படுத்துதல், கோயில் பழைய நகைகளை உருகுதல் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் கோயிலுக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் 490 கோவில்களுக்கான மானியத் தொகை ரூ.6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 225 மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானிய தொகையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காசோலையை வழங்கினார்.