தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஒமைக்ரான் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கோயில்கள், திரையரங்குகள் மற்றும் திருமண விழாக்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.