தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் மாணவர்கள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை நடந்தால் பொதுமக்கள் அவசர போலீஸ் எண் 100, 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் WWW.facebook.com /tnpoliceoff1cial என்ற பேஸ்புக் ஐடி, @tnpoliceoffl என்ற ட்விட்டர் ஐடி, 9498111191 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.