Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி”…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது…..!!!

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அணியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பலரும் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் முக கவசம் அணியாமலும், போதிய இடைவெளி இல்லாமலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர்.

இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் பொருந்தாதா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்திய போது கொரோனா பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, தற்போது நடத்தப்பட்ட கூட்டத்தை பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருந்ததா? எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும் தான் தொற்று பரவுமா? இவர்களின் கூட்டங்களில் பரவாத? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது, மக்கள் பற்றி கவலையும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |