Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |