கொரோனாவில் இருந்து உறுமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆய்வு குழு ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழகம் வந்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேர ஊரடங்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.