இந்தியா முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் புதிய பாதுகாப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய புலிகள் காப்பகமான களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இந்தத் திட்டத்திற்காக முதல் தவணையாக 2 கோடியே 83 லட்சம் 2-வது தவணையாக 1 கோடியே 6 லட்சம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இறுதி தவணையாக 1 கோடியே 89 லட்சம் ரூபாய் விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு 4.86 கோடியும், மேகமலை புலிகள் காப்பகத்திற்கு 2.12 கோடி ரூபாய்யும் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டமானது வனத்தில் புலி வேட்டை தடுப்பு,,காட்டு வளங்களை பாதுகாத்தல் காட்டுத் தீ ஏற்படாமல் தவிர்க்க செயல்படுத்தபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.