உத்திரபிரதேசம் , உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் என்று ஆலோசனை நடத்த உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலை ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.