Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் மொத்தமாக 25,009 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 6,761 மேற்பார்வையாளர்களும், 15,090 விற்பனையாளர்களும் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் 500 ரூ உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் தற்போது 12,750 ரூ என வழங்கப்படுகிறது. இதை 13,250 ரூபாயாக உயர்த்தி தருவதாக தெரிவித்து உள்ளது. அதன்பின் விற்பனையாளர்களின் ஊதியம் தற்போது 10,600 ரூ என இருக்கிறது.

இதனை 11,100 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்றும் உதவி விற்பனையாளர்களின் ஊதியம் 9,500 ரூபாய் இருக்கிற நிலையில் ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இவற்றில் விபத்து காயம், மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதிக்கு பிடித்தங்கள் செய்யப்படும். அதன்படி கடை மேற்பார்வையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.11,400 எனவும், விற்பனையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.9,508 எனவும், உதவி விற்பனையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.8540 எனவும் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |