கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் மற்றும் மைக்ரான் பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு,கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து கொரோனா நெகட்டிவ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.