Categories
மாநில செய்திகள்

சொன்னதை செய்தார் ரஜினி…. 100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி….!!!!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் தன்னால் முடிந்த உதவியை ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக செய்து வருகின்றனர். அதன்படி டிஎன்பிஎஸ்சி நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்களின் கஷ்டப்படும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி கொடுக்க உள்ளனர்.

அதற்கான விண்ணப்பத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவர்கள் https://rajinikanthfoundation.org/tnpsc.html# என்ற இணையத்தளத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |