‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியின் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி 3”. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு புகைப்படம் மற்றும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் தங்கத்துரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.