உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தபெளி பகுதியில் உள்ள அர்பன் டான்ஸ் அகடமி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் டான்ஸ் மாஸ்டராக ஆர்யன் சோனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு நடனம் பயின்று வந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.19,000 பணம் மாயமானது. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடனம் பயில வந்த சிறுமியிடம் டான்ஸ் மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். உடனே அந்த சிறுமி தனது தாயின் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து மாஸ்டருக்கு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் மொபைலில் 14 சிறுமிகள் மற்றும் பல பெண்களின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அங்கு நடன பயின்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதில் ஒரு சிறுமி மாஸ்டர் தினமும் தன்னை மிரட்டி நடன பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் மாஸ்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.