குஜராத் டாங் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2 மாதங்களுக்கு பின்னர் இணையத்தில் பரவி காணொளி வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைவரும் கைதாகியுள்ளனர். 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியை பலாத்காரம் செய்த 20 வயதிற்கு உட்பட்ட ஒருவர் மற்றும் 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பற்றி காவல்துறையினர் பேசியதாவது, 2 மாதங்களுக்கு முன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சிறுமி பங்கேற்றுள்ளார். வீடு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் அவரை பலாத்காரம் செய்தான்.
இந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழியில் காத்திருந்த 8 நண்பர்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக சிறுமியை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். ஒருவர் அதை வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வழியாக சிலர் வருவதை தெரிந்து கொண்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அதற்கு முன் நடந்தவற்றை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியையும் மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை தற்போது வீடியோ வெளியானதால் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.