Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினி…… அட இவரா….. அசத்தலான தகவல்…..!!!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

nelson_Rajini_OG

அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |