Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விடுமுறை தினத்தில் பள்ளிகள் திறந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை என்று டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ஆனால் அரையாண்டு விடுமுறைகளில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் விடுமுறை விதிமுறைகளை மீறி பள்ளிகளைத் திறந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |