சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் பிரிவு போட்ட ட்விட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக சுற்றுச்சூழல் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது மக்களிடையே இன்னும் முழுமையாக வரவில்லை. காலநிலை மாற்றத்தால் பேரழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் சூழ்நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து பூமி பல பேரழிவுகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்கள் திருந்துவதாக தெரியவில்லை. மாறாக சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபட்டு தான் உள்ளது. இந்நிலையில் திமுக சுற்றுச்சூழல் பிரிவு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கடற்கரையில் ஒரு நாய் நடந்தால் அது ஏற்படுத்தும் காலடித்தடம், குதிரை போனால் அதன் காலடித்தடம், பறவையின் காலடித்தடம் ஆகியவற்றைப் போட்டு விட்டு மனிதன் போனால் என்ன செய்கிறான் என்பதையும் கூறியுள்ளனர். மனிதன் போகும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் சிதறிக் கிடப்பதாக அதில் காட்டப்பட்டுள்ளது.
— DMK Environment Wing (@DMKEnvironWing) December 27, 2021
இது உண்மைதான். விலங்குகளின் நடமாட்டம் உள்ள இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் மனிதனின் கடற்கரை குப்பைமேடாக மாறிவிடுகின்றனர். இதற்கு உதாரணம் நம்ம சென்னை பீச் தான். எங்கு பார்த்தாலும் குப்பை, டீ குடித்தால் அந்த கோப்பையை அப்படியே வீசி விடுகின்றனர். சுண்டல் வாங்கி சாப்பிட்டால் அந்த பேப்பரை அப்படியே போட்டு விடுகின்றனர். கையில் உள்ளதை தூக்கி போட வேண்டும் என்ற உணர்வு தான் நம்மில் பலருக்கும் உள்ள.து இதை தான் இந்தப்படம் சுட்டிக்காட்டுகின்றது. இதில் மனிதன் என்பதற்கு பதில் முட்டாள் என்று கூறியுள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படம் விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் இதற்கு கமெண்ட்டை தெரிவித்து வருகின்றனர். சிலர் மனிதனை முட்டாள் என்று கூறுவதா என்று கூறினாலும், பலரும் இது நிஜமான உண்மை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.