Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி….. “தமிழக அரசு செய்த அசத்தல் ஏற்பாடு”….!!!

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு, அவர்கள் பள்ளிகளிலேயே நேரடியாக தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதால் கூடுதல் தடுப்பூசி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தப்பட உள்ளது.

Categories

Tech |