Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : தடுமாறும் இங்கிலாந்து அணி ….!வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட்  தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் இன்று    2-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் குவித்தார். இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது           2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் குவித்தது.இதில் கேப்டன் ஜோ ரூட் 12 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ்      2 ரன்னும் எடுத்து  களத்தில் உள்ளனர் .ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் போலன்ட்  தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Categories

Tech |