ஓவியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான ”களவாணி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனையடுத்து, மெரினா, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மூடர் கூடம், கலகலப்பு, காஞ்சனா 3 என அடுத்தடுத்த படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும், ‘பிக்பாஸ் சீசன் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பலர் நிறைய ஆர்மி உருவாக்கினர். இந்நிலையில், இவர் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.