மகன் விஷம் குடித்து இறந்ததை அடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காரகுப்பம் பகுதியை சேர்ந்த பூபதி ஹைதரபாத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், பிரேம்குமார், புனித் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மகன் பிரேம்குமார் கிட்னி பாதிப்பினால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பிரேம்குமாருக்கு அவருடைய தாயிடம் இருந்து கிட்னி பெற்று அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது பிரேம்குமாருக்கு மஞ்சல் காமாலை நோய் இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்த பிரேம்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியும் மகன் இறப்பை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த 2-வது மகன் தனது அண்ணனும், தாயும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரின் சடலமும் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உடல் நல குறைவால் மகனும், வேதனையில் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.