Categories
தேசிய செய்திகள்

சூப்பர் சலுகை…. ஏடிஎம் கார்டு மட்டும் இருந்தால் போதும்…. ரூ.2 லட்சம் கிடைக்கும்…. செம அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சலுகைகள் குறித்து முழுமையாக யாருக்கும் தெரிவதில்லை. தங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்து வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான சலுகைதான் 2 லட்சம் ரூபாய் காப்பீடு. எஸ்பிஐ கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் நாமினிக்கு 2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இது இறப்பு சலுகை ஆகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு முன்னர் இந்த வங்கியில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும். அதைத்தாண்டி கணக்கு தொடங்கி அவர்களுக்கு மட்டுமே 2 லட்சம் ரூபாய் இன்சுரன்ஸ் வழங்கப்படும். எஸ்பிஐ ரூபே ஜன் தன் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜன் தன் கணக்கு தொடங்கியிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் வாங்கியிருக்க வேண்டும்.

கார்டு இல்லாவிட்டால் தற்போது விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். அதன்பிறகு இரண்டு லட்சம் காப்பீடு வசதியை நீங்கள் பெற முடியும். மத்திய அரசால் தொடங்கப்பட்டது தான் இந்த ஜன்தன் யோஜனா திட்டம். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வரையில் ஓவர் டிராஃப்ட் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உண்டு. 2 லட்சம் விபத்து காப்பீடும் இதில் கிடைக்கின்றது. எஸ்பிஐ ரூபே கார்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தால் தான் விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |