திடீர் பெண்சாமியார் அன்னபூரணி வீடியோ பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் .
ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் பக்கம் பக்தர்கள் பலரும் அலைபாய ஆரம்பித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த அன்னபூரணி. ஆரம்ப காலத்தில் இவர் குறித்த பல வீடியோக்களை பலரும் தற்போது தட்டி எடுத்து வெளியில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவரா ஆதிபராசக்தி என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இதை பார்த்த லட்சுமிராமகிருஷ்ணன் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த வீடியோக்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம் மக்கள் ஏமாந்து போகிறார்கள் என்று மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் விழுவது மிகவும் தப்பான விஷயம் என்று அவர் தெரிவித்துள்ளார். புதிது புதிதாக புறப்பட்டு வரும் சாமியார்களின் வெற்றி என்பது அவர்களை நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கை நீடிக்கும் வரை மட்டும் தான் உள்ளது .இந்த அன்னபூரணி எந்த அளவுக்கு பிரபலமாகிரார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.