Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாமியார் வேடத்தில் சுற்றும் அன்னபூரணி…. ஆப்பு வைத்த காவல் துறையினர்….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அரசு மர்மமான முறையில் இறந்துவிடவே சிலகாலம் யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்திருந்த அன்னபூரணி, தற்போது ஆதி பராசக்தியின் மறு உருவமான அழைக்கப்பட்டு சாமியாராக வலம் வருகிறார். இந்த நிலையில் செங்கல்பட்டில் சாமியார் வேடத்தில் சுற்றும் அன்னபூரணி என்பவர் ஜனவரி 1-ஆம் தேதி அன்று நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Categories

Tech |