இங்கிலாந்து நாட்டில் Hhamshire Newarkகில் உள்ள Beacon Hill Retail Park என்ற பகுதியில் Tracey Carlisle(57) என்பவர் வசித்துவருகிறார். இவரது கணவர் Graham(61). இருவரும் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி என்று திகதி தங்களது 4X4 Nissan Navara காரை இலவசமாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்க்கும்போது அவர்களுக்கு £100 பவுண்ட் அவதாரம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி ஒரு குறிப்பிட்ட வெள்ளைக் கோட்டில் காரை நிறுத்தவில்லை என்பதை நான் மறுக்கவில்லை என்றும் ஆனால் அது கவனக்குறைவாக செய்யப்படவில்லை.
நாங்கள் 5.3 மீட்டர் நீளமுள்ள மற்றும் 2 மீட்டர் அகலமுள்ள காரை வைத்துள்ளோம். அதனால் குறிப்பிட்ட அளவில் எங்களது காரை நிறுத்த முடியவில்லை. காரை முழுமையாக திறக்கக் கூடுதல் இடம் தேவைப்பட்டது. எனவேதான் இரண்டு பார்க்கிங் ஏரியாவை ஒன்றாக இணைத்து காரை பார்கிங் செய்தோம். நான் அவதார தொகையை செலுத்துவேன். ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அது எங்களுக்கு கடன் நிலை அனைத்தையும் பாதிக்கலாம் என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.