கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய புதிய படமான நாய் சேகர் படத்திற்காக இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருடன் லண்டனுக்கு சென்று இருந்தார். அங்கு பத்து நாட்கள் தங்கிய பிறகு, தமிழகம் திரும்பிய அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒமைக்ரான தொற்று கூறிய அறிகுறிகள் இருப்பதாக கூறி கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சற்றுமுன் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.