Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதையடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி தினசரி 5,000 டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை வெளியிட்ட 15 நிமிடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை நாளை மாலை 3 மணி அளவில் இணையதளத்தில் வெளியிட உள்ளது. எனவே புத்தாண்டு அன்று ஏழுமலையானை தரிசிக்க நினைக்கும் விஐபி பக்தர்களுக்கு 1000 விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 13-ஆம் தேதி 1,000 தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. மேலும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலமாக 2,000 விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் மேலே குறிப்பிட்ட மற்ற நாட்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை 200 ரூபாய்களும் சனி மற்றும் ஞாயிறுகளில் 300 ரூபாய் டிக்கெட் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |