திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் 500 ரூபாய் கட்டணத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. அதாவது தினசரி 1000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல விஐபி பிரேக் தரிசனத்துக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே எளியமுறையில் விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் கொண்டுவந்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் 2.60 லட்சம் புக்கிங் செய்யப்பட்டு முடிந்துவிட்டது.