தங்கத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டி வீதி அசோக் நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் பொதுமக்களிடம் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக மாரியப்பன் 200 மற்றும் 500 மில்லி கிராம் எடை தங்கத்தில் 10 மஞ்சள் பைகளை வடிவமைத்து அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாரியப்பன் கூறும்போது சுற்றுசூழலை மேம்படுத்துவதற்காக மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே தங்கத்தில் 10 மஞ்சள் பைகளை வடிவமைத்து அதில் மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக் பைக்கு குட்பை என எழுதியுள்ளேன். மேலும் தேவைப்படுபவர்களுக்கு இதுபோல செய்து கொடுக்க தயாராக உள்ளேன் எனவும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.