தமிழகத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் போலீசார் உதவியுடன் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசிய போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெற வாய்ப்பில்லை எனவும் முத்தரசன் குறிப்பிட்டார்.
மேலும்,தமிழகத்தில் லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காவல்துறை உதவியுடன் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய முத்தரசன் இந்த சம்பவங்களில் சமூக விரோதிகளுக்கும் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விமர்சித்தார்.