சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துரையரசபுரம் பகுதியில் ஆவுடையார் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி மற்றும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பாஸ்கர் மற்றும் பொன்னுசாமி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையார் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.