Categories
தேசிய செய்திகள்

சிறார் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

நாடு முழுதும்ஒ மைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் முன் களப்பணியாளர்கள் சுகாதார பணியாளர் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் 15 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.

முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் டோஸாகி ஜனவரி 10-ஆம் தேதி முதல் செலுத்தப்படும்.

பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்ட உடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும்.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.

2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்கு செலுத்தப்படும்.

ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 3 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |