Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே 2000 ருபாய் வேணுமா?…. உடனே இதை அப்டேட் பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக 6000 ரூ நிதியுதவி விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்த பணமானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் 10-வது தவணைப்பணம் 2022 ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 10ஆவது தவணைப் பணம் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் முக்கியமான அப்டேட் ஒன்றைச் செய்ய வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக பிஎம் கிசான் வெப்சைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஜனவரி மாதம் தொடங்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் விவசாயிகள் உடனே தங்களது இ-கேய்சி விவரங்களை அப்டேட் செய்தாக வேண்டும்.

இல்லையெனில் 10-வது தவணைப் பணம் 2,000ரூ கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதில் 10-வது தவணையில் விவசாயிகளுக்கு 4000 ரூ கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. மத்திய அரசு அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி விவரங்களை உடனடியாக அப்டேட் செய்யாவிட்டால் நிதியுதவியே கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

எனவே பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று Farmers Corner என்ற பிரிவில் e-kyc ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் நம்பர் கேப்ட்சா குறியீடு, மொபைல் நம்பர் ஆகியவற்றை பதிவிட்டு, ஓடிபி சரிபார்ப்பையும் முடித்துவிட்டால் போதும். இதனையடுத்து இ-கேய்சி விவரங்கள் அப்டேட் ஆகிவிட்டால் தவணைப் பணம் வருவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது இ-சேவை மையத்திலோ அப்டேட் செய்ய முடியும்.

Categories

Tech |