Categories
தேசிய செய்திகள்

BREAKING: புத்தாண்டுக்கு கட்டுப்பாடு…. மதுக்கடை 50% மட்டுமே…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 31 தேதி இரவு 10 மணி வரை மதுபானகடை, பார், உணவு விடுதி, கிளப் போன்றவற்றில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

 

Categories

Tech |