Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணமா…? வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி  வசித்து வருகிறார்  . இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலச்சித்தக்குடிபட்டி  கிராமத்தில் வசிக்கும் பசுபதி என்பவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருப்பூரில் தங்கியிருந்த சிறுமியை  தனிப்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும்  பசுபதி, அவரது தந்தை நல்லுசாமி, உறவினர் சசிகுமார் ஆகியோரை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |