வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம்பள்ளியில் இருக்கும் பாலாற்றில் திரிசூலம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த போது 3 பேரை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மளிகை கடை உரிமையாளரான ராஜா, அவருடைய மகள் பெர்சி மற்றும் அவரது அண்ணன் மகனான லெனின்ஸ்டன் என்பது தெரியவந்துள்ளது.