Categories
தேசிய செய்திகள்

“Uncle-னு சொன்னது குத்தமா”…. கடைக்காரர் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் “அந்த பெண் ‘Uncle’ என அழைத்த காரணத்தினால் கடைக்காரர் மோகித் குமார் கோபமடைந்து இதை செய்துள்ளார்” என்று காவல் நிலைய அதிகாரி பிரகாஷ் தாணு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |