Categories
மாநில செய்திகள்

BREAKING :தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும். ஜனவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 750 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகளுக்கு நாள், நேரம் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |