கொரோனா தொற்றுக்கு பின் முதன் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. வரும் புத்தாண்தில் இருந்து 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலமாக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்யா முடியும். இதில் சிறுது தூரம் செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களின் பொதுப் பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்ய ஜனவரி 1-ம் தேதி முதல் டிக்கெட் வழங்கப்படும்.
5069-5070- கோரக்பூர்-ஐஷ்பாக்-கோரக்பூர் இன்டர்சிட்டி
5008-5007- வாரணாசி-லக்னோ-வாரணாசி
2531-2532- கோரக்பூர்-லக்னோ-கோரக்பூர் இன்டர்சிட்டி
5103-5104- கோரக்பூர்-வாரணாசி-கோரக்பூர் இன்டர்சிட்டி
5113-5114- கோம்திநகர்-சப்ரா கச்சாரி-கோம்திநகர்
5083-5084- ஃபரூக்காபாத்-சாப்ரா-ஃபரூக்காபாத்
5105-5106- சாப்ரா-நௌதன்வா-சாப்ரா எக்ஸ்பிரஸ்
5009-5010- கோரக்பூர்-மைலானி-கோரக்பூர் எக்ஸ்பிரஸ்
5043-5044- லக்னோ-கத்கோடம்-லக்னோ எக்ஸ்பிரஸ்
5054-5053- லக்னோ-சாப்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்
எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது டிக்கெட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டபின், முன்பதிவு என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் இருந்து பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இதில் முன்பதிவு என்ற பெயரில் 15 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பயணிகளை பாதிக்கிறது மற்றும் அன்ரிசர்வ் டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்படுவதால், ரயில்வேயின் வருமானமும் உயர வாய்ப்புள்ளது.
இதனிடையில் சில காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாத பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். அத்தகைய பயணிகள் இனிமேல் நேரடியாக நிலையத்துக்கு சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். இதை சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மட்டும் தொடங்குவதற்கு வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் ஒருவேளை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றால் வரும் தினங்களில் இந்த வசதி மற்ற ரயில்களிலும் செயல்படுத்தப்படும்.