Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன்கூட வாழ மாட்டேன்” காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஏசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏசுராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு ஏசுராஜ் மட்டும் திருவொற்றியூருக்கு திரும்பி வந்துள்ளார். மேலும் அஸ்வினி ஏசுராஜுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஏசுராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |