சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைவீதி உள்பட 4 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைவீதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் அவர் பன்னீர் செல்வம் என்பதும், இவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பன்னீர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.