லடாக் மாநிலத்தில் கார்கில் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இன்று மாலை கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளி வந்து, சாலையில் தஞ்சமடைந்தனர். இதை தொடர்ந்து ரிக்டர் அளவுகோல் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. முன்னதாக தமிழகம், வேலூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories