தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தெரு வாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின்(POS) மூலம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.