Categories
மாநில செய்திகள்

பஸ்சில் நின்றுகொண்டே பயணம்….. முன்மாதிரியாக விளங்கிய பெண் கலெக்டர்…..!!!!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியாக வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் பேருந்திலோ, சைக்கிளோ நடந்துவர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா இன்று இரண்டாவது வாரமாக தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காக கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் வந்தார்.

அவர் மகளிர்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்தார்.பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர்.  வாரத்தில் ஒரு நாள் இதே போல் அனைத்து அதிகாரிகளும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |