Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அறிமுகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… அதன் சிறப்பு அம்சங்கள் இதோ…!!

உலக அளவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இந்தியா மாறி வருகிறது. எரிபொருளின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘எலக்டா’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்-மோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் ஒன்-மோட்டா நிறுவனம் Commuta மற்றும் Byka என்று இரண்டுவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது வாகனத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து  ‘எலக்டா’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிக சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதாவது ஜியோ ஃபென்சிங், புளூடூத் இணைப்பு, IoT, பராமரிப்பு எச்சரிக்கைகள், ரைடிங் Behaviour, இன்னும் பல ஆப்ஷன்கள்  உள்ளன. அதுமட்டுமில்லாமல் 45 AH லித்தியம்-ion பேட்டரி, 4 kW (5.36 bhp) DC ஹப் மோட்டார்  உள்ளது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இதனை மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தில்  ரைட் செய்யலாம். வெறும் நான்கு மணி நேரத்தில் இதன் பேட்டரியை சார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |