ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய கூடாது என்று தலிபான்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் என்று கூறிவிட்டு சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்கள் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தால் கட்டாயம் ஆண் உறவினரின் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அதிலும் பயணத்தின் போது கட்டாயம் ‘ஹைஜாப்’ அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அதையும் மீறி ஹைஜாப் அணியாமல் பெண்கள் வாகனங்களில் பயணம் மேற்கொண்டால் ஓட்டுநர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. மேலும் வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் பாடல்களை கேட்கவே கூடாது உள்ளிட்ட பயங்கரமான அறிவிப்புகளை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.