ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து தற்போது இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் ரஜினிகாந்த அறக்கட்டளை இணையதளம் டிசம்பர் 26-ஆம் தேதி 2021 அன்று மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்திய திரைத் துறையின் சூப்பர்ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை தலைமைத்துவம் அறிவியல் மனப்பான்மை ஜனநாயக மயமாக்கப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
கல்வி எங்களுக்கு உலகளாவிய பார்வை. இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம் நிலையான முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன் இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய இந்த இணையதள முகவரியை பின்தொடரவும்.
http://rajinikanthfoundation.org/tnpsc.html